300 சதுர அடி குடியிருப்பு
சிறிய இடத்தை பெரிதாக உணர வைப்பதே வடிவமைப்பின் நோக்கமாகும். அதை அடைய, ஒவ்வொரு சதுர அடியும் அதிகபட்சமாக வாழக்கூடிய பகுதியைப் பெற உணர்வுபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு தெரு.. அதில் ஒரு 12'க்கு 22' மனை.. இரண்டு மாடி.. கீழே ஒரு குடும்பம், மேலே ஒன்று.. இப்போது மேல் வீட்டிற்கு செல்வோம்...
சிறிய இடம் என்பதற்காக வரவேற்பில் குறை இருக்கக்கூடாது என நுழைந்தவுடன் ஒரு சுவர் நம்மை வரவேற்கிறது..இடதுபுறம் திரும்ப வரவேற்பறை அதனையொட்டி சமையலறை..
குறைவான இடம் என்பதால் சமையலறை மற்றும் வரவேற்பறை சுவர் கொண்டு பிரிக்கப்படவில்லை..மாற்றாக சமையல் மேடை இவற்றிற்கு தடுப்பானாக அமைக்கப்பட்டுள்ளது..
மேலும் இயற்கை ஒளியை உள்ளே கொண்டு வர skylight, படுக்கையறையை பெரிதாக காட்டும் கண்ணாடி அலமாரி என ஒரு நல்ல இருப்பிடமாக இந்த 300 sq.ft குடியிருப்பு திகழ்கிறது...
திருச்சியில் சிறிய அடுக்கு வீடு | கட்டிடக்கலை
(திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில்)